சிக்கல் தீர்வு
பொதுவான சிக்கல்கள்
பிற சாதனங்கள் அதே பிணையத்தில்தான் உள்ளன என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரிந்தால், பின்வரும் சிக்கல்கள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்:
LANBucket இயங்குகிறதா?
எல்லாச் சாதனங்களிலும் LANBucket-இன் சமீபத்திய பதிப்பு இயங்கிக்கொண்டிருப்பதை உறுதிசெய்யவும்.
Microsoft Defender தீச்சுவர்
சாதனங்களைக் கண்டறியவிடாமல் LANBucket பயன்பாட்டை Microsoft Defender தீச்சுவர் தடுக்கக்கூடும். “தனிப்பட்ட”, “பொது” ஆகிய இரண்டு வகைப் பிணையங்களிலும் தீச்சுவர் வழியாக LANBucket அனுமதிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும். மேலும் அறிய: தீச்சுவர், பிணையப் பாதுகாப்பு பற்றிய உதவி (ஆங்கிலத்தில்)
நிறுவன, பெருநிறுவனப் பிணையங்கள்
பல நிறுவனப் பிணையங்கள் மல்டிகாஸ்ட் போக்குவரத்தைத் தடுக்கின்றன; LANBucket இயங்க அது அவசியம். கடுமையான பாதுகாப்புக் கொள்கைகள் உள்ள அலுவலகப் பிணையங்களில் இந்தப் பயன்பாடு வேலை செய்யாமல் போகலாம்.
VPN இணைப்புகள்
நீங்கள் VPN உடன் இணைந்திருந்தால், உள்ளூர் பிணையத்தில் சாதனங்களைக் கண்டறிவதை அது தடுக்கக்கூடும். உங்கள் VPN இணைப்பைத் துண்டித்துப் பார்க்கவும்.
மெய்நிகர் கணினிகள், WSL
மெய்நிகர் கணினி (Hyper-V, VirtualBox, VMware), WSL அல்லது பிற மெய்நிகராக்கச் சூழல்களுக்குள் LANBucket பயன்பாட்டை இயக்கினால், மெய்நிகர் பிணைய அடாப்டர்கள் காரணமாக, பிணையத்தில் சாதனங்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்படலாம். அதேபோல, இந்தக் கணினியில் மெய்நிகர் கணினிகள் இயங்கினால், அவற்றை முடக்குவது உதவக்கூடும்.
Wi-Fi தனிமைப்படுத்தல் / விருந்தினர் பிணையங்கள்
சில Wi-Fi பிணையங்களில் (குறிப்பாக விருந்தினர் பிணையங்களில்) தனிமைப்படுத்தல் இயக்கப்பட்டிருக்கும்; சாதனங்கள் ஒன்றையொன்று கண்டறிவதை இது தடுக்கிறது. வேறொரு பிணையத்தைப் பயன்படுத்திப் பார்க்கவும்.